Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உறவினரை ஏற்றி சென்ற மீன் வியாபாரி…. சிறிது நேரத்தில் நேர்ந்த துயரம்…!!!

நாமக்கல் மாவட்டம் பாலமேடு அடுத்த சின்ன பாலமேட்டில்  வசித்து வந்தவர் காஞ்சி வனம். இவருக்கு வயது 20 . இவர் மீன் வியாபாரம் பார்த்து வரும் நிலையில் நேற்று, இவரது உறவினரான சுகமதி என்பவரை அவரது  இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவரது சொந்த ஊரான  சின்னபாலமேட்டில் இருந்து பாலமேடு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது பாலமேட்டில் இருந்து அலங்காநல்லூர் நோக்கி  சரக்கு ஏற்றிவந்த  டிப்பர் லாரி மோதியதில்  சம்பவ இடத்திலயே காஞ்சி வனம் பலியானார்.

சுகமதி சிறிய  காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இதனையடுத்து இந்த விபத்து குறித்து பாலமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Categories

Tech |