வீட்டின் கதவை உடைத்து தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள வசந்த் நகரில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினரை பார்ப்பதற்காக வெளியூர் சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஸ்ரீதர் அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஸ்ரீதர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.