வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நெய்க்குப்பை கிராமத்தில் மூர்த்தி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மூர்த்தியின் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு உறவினரை பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மூர்த்தி அதிர்ச்சி அடைந்தார்.
அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மூர்த்தி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.