வீட்டின் கதவை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள க. எறையூர் கிராமத்தில் மணிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மணிவேல் தனது குடும்பத்தினருடன் உறவினர்களை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மணிவேல் அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பூஜை அறையில் இருந்த 48 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மணிவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.