வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆறுமுகம்-ஜெயந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூரில் இருக்கும் உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு இந்த தம்பதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 35 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆறுமுகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.