பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பொன்பத்தி கிராமத்தில் செல்வம்-பொன்னம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் உறவினரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றனர். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு செல்வம் அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 1 லட்ச ரூபாய் பணம் மற்றும் 41 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செல்வம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.