Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற தம்பதியினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் முருகன் விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு முருகன் அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து முருகன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |