வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் ஆறுமுகம்-சண்முகசுந்தரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு உறவினரை பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த தம்பதியினர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது 22 பவுன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆறுமுகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.