மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஜக்கசமுத்திரம் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அர்ஜூன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அர்ஜூன் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து கவுண்டன அள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அர்ஜூனின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம் மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அர்ஜூன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.