Categories
தற்கொலை திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உறவினர்களின் பேச்சை கேட்டு தகராறு…. பெண் தீக்குளித்து சாவு…. கணவன் உட்பட 5 பேர் கைது…!!

செஞ்சி அருகே தீக்குளித்து பெண் இறப்பிற்கு காரணமாக இருந்த கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி அருகே உள்ள திருவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குப்பனின் மகன் அன்பழகன், சோம சமுத்திரத்தை சேர்ந்த ராஜேஸ்வரின்  மகள் செல்வி இருவருக்கும் திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் அன்பழகன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தார்.கடந்த 11ஆம் தேதி அவர் உறவினர்கள் பேச்சைக் கேட்டு செல்வியிடம் தகராறு செய்து அவரை திட்டியதால் மனமுடைந்த செல்வி   மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அதில் படுகாயம் அடைந்த அவரை  அணிலாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செல்வியின் தாய் செஞ்சி போலீசில் தனது மகள் சாவுக்கு அவரது கணவரும் உறவினர்களும் காரணம் என புகார் அளித்தார் அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முகமது அசாருதீன் செல்வியின் கணவர் அன்பழகன் ,அவரது சகோதரர்கள் ஆறுமுகம், மாரிமுத்து, உறவினர்கள் வடமலை, தேசம்மாள் ஆகிய  5 பேர் மீது வழக்கு பதிவு விசாரணை நடத்துகின்றனர்.

Categories

Tech |