வாலிபர் ஒருவர் தனது பகுதியில் வசிப்பவரின் வீட்டிற்கு பெண் கேட்டு சென்று தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மஞ்சபுத்தூர் கிராமத்தில் பிச்சப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அதே பகுதியில் வசிக்கும் முனுசாமி என்பவரின் மகளை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.
இதனால் முனுசாமி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டன், அவரது உறவினர் மற்றும் நண்பர்களை கைது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.