Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“உறவினர்கள் ஏதாவது சொல்வார்கள்” மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி குறிஞ்சி நகரில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி(36) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கஜேந்திரன்(3), பூமிகா(2) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பார்வதி மீண்டும் கர்ப்பமானார். இது தெரிந்தால் குடும்பத்தினர் ஏதாவது சொல்வார்கள் என நினைத்து கணவன் மனைவி இருவரும் கர்ப்பமாக இருப்பதை மறைத்தனர். நேற்று முன்தினம் நாழிக்கல்பட்டி கோட்டைகரடு பகுதிக்கு தம்பதியினர் சென்றுள்ளனர்.

அப்போது திடீரென பார்வதிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் பூபதி அவருக்கு பிரசவம் பார்த்துள்ளார். பின்னர் இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்தது தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியில் குழி தோண்டி அந்த பெண் குழந்தையை புதைத்தனர். சிறிது நேரத்தில் பார்வதியும் மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பூபதி செய்வது அறியாது கதறி அழுதார். இதை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பார்வதி மற்றும் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பொதுவெளியில் பிரசவம் பார்த்தது, மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் இருந்தது போன்ற குற்றங்களுக்காக பூபதியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |