Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“உறவினர்கள் ஏற்று கொள்ளவில்லை” காதல் தம்பதி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் பகுதியில் ராஜசேகர்(33) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் கௌசல்யா(28) என்ற பெண்ணை ராஜசேகர் இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென ராஜசேகருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தனர். ஆனால் பெற்றோரும், உறவினர்களும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த தம்பதியினர் நாமக்கல்லுக்கு சென்று தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் விடுதி அறையில் மயங்கி கிடந்த இருவரையும் ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களை செய்த மருத்துவர்கள் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதால் இருவரும் மயங்கி விழுந்ததாக தெரிவித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |