சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 17 வயதுச் சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் 17 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமியை கடந்த 10 தேதியில் இருந்து காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்நடத்திய விசாரணையில் சிறுவன் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி நாகப்பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்கு வைத்து சிறுவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சிறுவனை கோக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டனர்.