மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஓதியக்குப்பம் பகுதியில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனுஷ் அதே பகுதியில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை அடுத்து தனுஷ் அந்த மாணவியை உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் தனுஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.