Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற மாணவன்… ஆற்றில் இறங்கியதால் ஏற்பட்ட சோகம்…. கதறிய பெற்றோர்…!!

உறவினர் வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவருடைய  மகன் மேத்யூ(20).  இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.  நேற்று மோகன் அவருடைய  குடும்பத்தினருடன்  அரக்கோணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்  . அப்போது அவர்கள் அங்குள்ள கல்லாற்றில் தண்ணீர் செல்வதை பார்க்க சென்றனர்.

அங்கு குளிப்பதற்காக மேத்யூ மற்றும் 3 இளைஞர்கள் ஆற்றில் இறங்கியுள்ளனர் .ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் மேத்யூவை தண்ணீர் இழுத்து சென்றது . மேத்யூவுடன் குளிக்க சென்ற மூவரும் மேத்யூவை மீட்க முயற்சித்தனர். ஆனால் அவர்களால் மேத்யூவை மீட்க முடியவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அழுது துடித்துள்ளனர் .

இச்சம்பவம் குறித்து உடனடியாக  தீயணைப்பு துறை வீரர்களுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய  வீரர்கள் மேத்யூவை தேடினர். அவர்களால் மேத்யூ வை கண்டுபிடிக்க முடியவில்லை.  இரவு நீண்ட நேரமானதால் வெளிச்சம் குறைந்தது . இதனால் மேத்யூவை வை தேடும் பணியை நிறுத்தி  வைத்தனர்.

இன்று காலையில் தீயணைப்புநிலைய  வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆற்றில் மேத்யூவை  தேடும் பணியை தொடர்ந்தனர். பின்னர்  காலை 7 மணி அளவில்  மேத்யூவின் சடலத்தை ஆற்றிலிருந்து மீட்டனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேத்யூவின்  சடலத்தை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |