மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள மங்கம்மாள் சாலையில் குணசீலன்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்பவருடன் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் கரையாளனூர் கிராமம் அருகே இருக்கும் வளைவில் திரும்ப முயற்சித்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வயலுக்குள் பயந்தது.
இதனால் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குணசீலன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.