Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடிக்கு அருகில் வெள்ளானூர் பாரதி நகரில் மாலதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருமணமாகி  தனது  கணவருடன் வசித்து வருகிறார். இதனால்  வீட்டில் மாலதி மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் மாலதி காலை நேரத்தில் வீட்டை பூட்டிவிட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே மாலதி தனது வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த மரத்தாலான பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 32 பவுன் தங்க நகை மற்றும் 50,000 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாலா  ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |