பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைசாமி புரத்தில் ஐயனார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருவம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் தனது உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது குருவம்மாளை பின் தொடர்ந்து சென்ற 2 பேர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
மேலும் குருவம்மாள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.