உறவினர் வீட்டிற்கு சென்ற சமயம் தந்தை மகனை பறிகொடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கோபி என்பவர் தனது குடும்பத்தினருடன் ராமநாதபுரத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது காட்டு பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ள குளத்தில் குளிக்க தனது இரண்டு மகன்களான விஷ்வா மற்றும் விமலுடன் கோபி சென்றுள்ளார். இந்நிலையில் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்த சமயம் திடீர் என சிறுவன் விமல் தண்ணீரில் மூழ்கியுள்ளான்.
இதனைப் பார்த்த அண்ணன் விஷ்வா காப்பாற்றுங்கள் என்று உதவி கேட்டு சத்தமிட்டு உள்ளார். இதனால் அக்கம் பக்கம் இருந்தவர்கள் குளத்தில் குதித்து சிறுவனை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் சிறுவன் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 5 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தண்ணீரில் மூழ்கிய சிறுவன் விமலின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து ராமநாதபுரம் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.