Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டுக் சென்று வந்த பெண்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… அதிர வைத்த திருச்சி சம்பவம் …!!!

திருச்சி அருகே விட்டை பூட்டிவிட்டு  ஊருக்கு சென்ற பின் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு  போனது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டதில் உறையூர் பகுதியில் உள்ள அண்ணாமலை நகரை சேர்ந்தவர் விசாலாட்சி. 68 வயதுடைய இவர் கடந்த  20-ஆம் தேதி வீட்டை அடைத்துவிட்டு விட்டு ஸ்ரீரங்கத்தில் இருக்கும் உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று ஊரில் இருந்து திரும்பி வந்துள்ளார்.

அப்பொழுது வீட்டின் பின்பக்கத்திலுள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு வீட்டிற்குள் சென்று பார்த்தபொழுது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகைகளும், வெள்ளி பொருட்களும் திருட்டு போனது தெரியவந்ததுள்ளது.

திருட்டுசம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் உறையூர் காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்து  வலைவீசி குற்றவாளிகளை தேடி வருகின்றார்கள்.

Categories

Tech |