மத்திய பிரதேசம் சாஹர் மாநிலம் மஞ்குவா என்னும் கிராமத்தில் ஜோதி என்கிற ப்ரீத்தி டங்கி(21) வசித்து வருகிறார். இவர் கடந்த வியாழக்கிழமை அன்று மாலை வயல் பகுதிக்கு சென்று உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வயல் பகுதியில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். ஜோதி மாயமானது பற்றி சந்தேகம் அடைந்த பெற்றோர் தேடியதில் அவர் வயல் பகுதியில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து இருக்கின்றன. அதன் பின் உடலை மீட்டு குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை இறுதி சடங்கு செய்ய கிராமத்தில் உள்ள இடுகாட்டிற்கு ஜோதியின் உடலை கொண்டு சென்றுள்ளனர்.
இதற்கிடையில் ஜோதியின் மரணம் குறித்து தகவல் அறிந்த அவரின் உறவுக்கார இளைஞன் கரண்(21) என்பவர் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக தான் வசித்து வரும் பகுதியில் இருந்து ஜோதியின் கிராமத்திற்கு 430 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் பயணம் செய்திருக்கின்றார். இந்த நிலையில் இடுகாட்டில் ஜோதியின் உடலுக்கு அவர் தந்தை ஏறியுட்டியுள்ளார். அப்போது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த கரன், ஜோதியின் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் தானும் அந்த எரியும் சிதையில் குதித்துள்ளார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் சிதையில் குதித்த கரணை நீண்ட போராட்டத்திற்குப் பின் மீட்டுள்ளனர்.
எரியும் சிதையில் குதித்து தீக்காயங்களுடன் படுகாயமடைந்த கரணை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் படுகாயமடைந்த கரண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவுக்கார பெண்ணின் இழப்பை தாங்கமுடியாமல் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.