Categories
சினிமா தமிழ் சினிமா

உறவுக்கார பெண்ணுடன் மலர்ந்த காதல்… ரகசியமாக திருமணம் செய்த பிரபுதேவா… வெளியான தகவல்கள்…!!

பெற்றோர் சம்மதத்துடன் பிரபுதேவா ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமாகி பின் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறைகளில் அசத்தி வருபவர் பிரபுதேவா. பல வருடங்களுக்கு முன்  பிரபுதேவா நடிகை நயன்தாராவை விரும்புவதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து பிரபுதேவா அவரது மனைவியை விவாகரத்து செய்து கொண்டார்.

அனால் நயன்தாராவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியில் முடிந்ததால் இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை. தற்போது பிரபுதேவாவுக்கு உறவுக்காரப் பெண்ணுடன் 2-வது திருமணம் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மணப்பெண் பிசியோதெரபி டாக்டராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. பிரபுதேவா பிசியோதெரபி சிகிச்சைக்காக இவரிடம் சென்ற போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. பின் பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் ரகசியமாக நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |