தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமரை முதல்வர் முக ஸ்டாலின் இன்று சந்தித்து பேச தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். இதையடுத்து டெல்லி சென்ற முதல்வர் பிரதமர் மோடியுடன் பேசினார். இதில் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக மோடியிடம் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையின் 7 பேர் விடுதலை, நீட் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், பிரதமருடனான சந்திப்பு மனநிறைவாக இருந்ததாகவும், நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வு ரத்து செய்யவேண்டும் என்றும் புதிய கல்விக் கொள்கை திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும் உறவுக்கு கைக்கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதே எங்கள் நிலைப்பாடு என்று கூறியுள்ளார். மேலும் மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.