Categories
சினிமா தமிழ் சினிமா

உறுதியானது பிரபல ஹீரோ படத்தின் ரிலீஸ் தேதி…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!

எதற்கும் துணிந்தவன் படம் பிப்ரவரி மாதம் 17 அல்லது 18-ம் தேதி ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மார்ச் மாதம் 10-ம்  தேதி ரிலீஸாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் டி-இமான் இசையமைப்பாளராகவும்  மற்றும் ஒளிப்பதிவை ஆர்.ரத்தினவேலு கையாளுகிறார்.

இந்தப் படம் பிப்ரவரி 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் தெரிவித்த நிலையில் கொரோனா பரவல் குறையாத காரணத்தால் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், இப்படக்குழுவினர் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளனர். மேலும் இப்படம் பிப்ரவரி மாதம் 17 அல்லது 18-ம் தேதி ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மார்ச் மாதம் 10-ம்  தேதி ரிலீஸாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Categories

Tech |