கடந்த மூன்று வாரத்தில் மட்டும் 250 ஆப்கானிய ராணுவ வீரர்கள் தலிபான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் சென்ற மூன்று வாரங்களாக 11 மாகாணங்களில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 250 ஆப்கானிய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மட்டுமன்றி 300 பேர் காயமடைந்து இருப்பதாக ஊடகங்கள் கூறியுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதலில் வடக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியை சேர்ந்த ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்தனர். சென்ற பிப்ரவரி 29-ல் அமெரிக்க-தலிபான் சமாதான ஒப்பந்தத்தில் தோஹாவில் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் மாகாண தலைநகரங்கள் ஆகியவை மீது எத்தகைய தாக்குதலும் நடத்தப்படாது என தலிபான்கள் உறுதியாகக் கூறினர்.
ஆனாலும் ஜாபுல்-காந்தஹார், பாகாலான்-சமங்கன் மற்றும் காபூல் நங்கர்ஹார் நெடுஞ்சாலைகள் மீது தலிபான்கள் மிகுந்த தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்ற மூன்று வாரங்களில் 250 ஆப்கான் வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.