அமெரிக்காவில் உள்ள ஹரிசோனா மாகாணத்தில் நாராயண முத்தனா- ஹரிதா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. கடந்த 26 -ஆம் தேதி 6 பெரியவர்கள், 5 குழந்தைகள் கொண்ட 3 குடும்பங்கள் தங்களது பகுதியில் இருந்து கோகோனிகா கவுண்டிக்கு சுற்றுலாவிற்கு சென்று உள்ளனர். அங்குள்ள உறைந்து போன ஏரியை பார்த்தவுடன் நாராயண முத்தனா, ஹரிதா மற்றும் அவர்களது நண்பர் கோகுல் சேத்தி போன்றோருக்கு அதை புகைப்படம் எடுக்க ஆசை வந்தது.
இதனையடுத்து அவர்கள் உறைந்த ஏரியின் மீது நடந்து கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் தவறி விழுந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் ஹரிதாவை முதலில் மீட்டனர். ஆனால் அவர் உயிரிழந்துள்ளார். அதன் பின் நாராயண முத்தானாவும்,கோகுலா சேத்தியும் மீட்டுள்ளனர். இந்நிலையில் நாராயண முத்தனா- ஹரிதா தம்பதியினரின் இரண்டு மகள்களை அவர்களது பக்கத்து வீட்டுக்காரரான கிஷோர் பிட்டாலா என்பவர் பாதுகாப்பில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எனும் தகவலை ஹரிசோனா தெலுங்கு சங்கத்தின் தலைவர் வெங்கட் கொம்மினேனி கூறியுள்ளார்.