முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டதை வரவேற்கும் விதமாக அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இதனை அறிவித்தார். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதும் கட்சி தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.
இனிப்புகள் பரிமாறியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோன்று முதலமைச்சரின் சொந்த ஊரான எடப்பாடியிலும் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக-வின் முதலமைச்சர் வேட்பாளரின் பெயர் இன்று அறிவிக்கப்பட்ட சூழலில் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமே தொண்டர்களால் களைகட்டியது.