நெல்லையப்பர் கோவிலில் உள்ள யானையின் குறும்படத்தை இந்து அறநிலையத்துறையினர் வெளியிட்டுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் இருக்கும் கோவில்கள் உள்ள யானைகளின் தினசரி நிகழ்வுகள் அனைத்தும் குறும்படமாக எடுத்து தொகுத்து வெளியிடப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
அதன்படி திருநெல்வேலியில் இருக்கும் நெல்லையப்பர் கோவிலில் உள்ள யானை காந்திமதியின் அன்றாட நிகழ்வை ஐம்பது வினாடிகள் ஓடக்கூடிய குறும்படமாக அறநிலையத்துறையினர் தயாரித்துள்ளார்கள். அந்த குறும்படத்தில் யானை சவரில் குளிப்பது, புதிதாக கட்டப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் குளியல், நடைப்பயிற்சி, அதற்கு வழங்கப்படும் உணவுகள் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றது.