Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“உற்பத்தி குறைவால் அதிகரித்த வெல்லம் விலை”…. எவ்வளவு தெரியுமா…????

உற்பத்தி குறைவால் வெல்லம் விலை அதிகரித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள மரவாபாளையம், நொய்யல், தவிட்டுப்பாளையம், ஓலப்பாளையம், நடையனூர், திருக்காடுதுறை என பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கரும்பு நடவு செய்து வெள்ளம் தயாரிக்கும் அதிபர்களிடம் விற்பனை செய்கின்றார்கள். கரும்புகளை வாங்கிய வெள்ளம் தயாரிப்பு ஆலை, கரும்புகளை சாறு பிளிந்து பாகு காய்ச்சி அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை உள்ளிட்டவற்றை தயாரிக்கிறார்கள். இதன்பின் வெள்ளங்களை உலர வைத்து 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயாரிக்கின்றார்கள்.

அவ்வாறு தயார் செய்யப்பட்ட வெள்ள சிப்பங்கள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அவ்வாறு வாங்கப்பட்ட வெள்ளை சிற்பங்கள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இந்த நிலையில் உற்பத்தி குறைவால் நேற்று முன்தினம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் 1220க்கு விற்பனை செய்யப்பட்டது. அச்சு வெல்லம் ஒரு சிப்பம் 1190 க்கும் விற்பனை செய்யப்பட்டது. கரும்பு ஒரு டன் 2100 வரை விற்பனை செய்யப்பட்டது.

Categories

Tech |