இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் பல விதமான நூதன மோசடிகள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஆன்லைன் என்ற நிலை உருவாகி விட்டதால் மக்கள் அதனை எளிதில் பயன்படுத்தி விடுகின்றனர். ஆனால் அதனையே சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஹேக்கர்கள் பலவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற மோசடிகளில் மக்கள் யாரும் சிக்க வேண்டாம் எனவும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை எதற்காகவும் யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பிலிருந்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரின் தற்போது நடைபெற்ற வரும் நிலையில் சமீப காலமாக உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை காண 50 gb டேட்டா இலவசம் என்று ஒரு செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதனைக் குறிப்பிட்ட நபர்களுக்கு ஷேர் செய்தால் உங்களுக்கு 50 ஜிபி டேட்டா இலவசம் என அதில் குறிப்பிடப்பட்டிருப்பதால் பலரும் இதனை நம்பி அந்தச் செய்தியை வெகுவாக பரப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை காண 50 gb டேட்டா இலவசம் என்று வரும் லிங்கை ஓபன் செய்ய வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இதன் மூலம் ஹாக்கர்கள் உங்களின் தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடும். மேலும் இது போன்ற மெசேஜ்களை பகிர வேண்டாம் என்றும் ஏமாற வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான மெசேஜ்களை கண்டால் 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.