Categories
உலக செய்திகள்

“உலகத்திற்கே பெரும் உத்வேகமாக அமைந்தது”… உக்ரைன் மக்கள் குறித்து ரிஷி சுனக் பேச்சு…!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையான கண்டனம்  தெரிவித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகிறது. இதற்கிடையே இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்று கொண்ட ரிஷி சுனக் உக்ரைன், ரஷ்யா இடையேயான போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் இன்று உக்ரைனுக்கு சென்ற ரிஷி சுனக் தலைநகர் கீவ்வில் அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியை  நேரில் சந்தித்து பேசியுள்ளார்.  அப்போது உக்ரைனுக்கு  மேலும் 60 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க இருப்பதாக ரிஷி அறிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பு பற்றி ரிஷி சுனக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, உக்ரைன் மக்களின் இந்த துணிச்சல் உலகத்திற்கே மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது. விடுதலைக்காக போரிடுவது என்றால் என்ன என்பது இங்கிலாந்திற்கு நன்றாகவே தெரியும் என கூறியுள்ளார்.

Categories

Tech |