விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள எனிமி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி . அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்குகியுள்ளார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமய்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Loved fighting out with #Enemy @VishalKOfficial 🥊🥊😘😘
Watch here (TAMIL) – https://t.co/GH9VCm62zb#ENEMY @anandshank @vinod_offl @MusicThaman @SamCSmusic @RDRajasekar @prakashraaj @shankaruppusamy @mirnaliniravi @mamtamohan @Thangavelramal1 @RIAZtheboss @divomovies
— Arya (@arya_offl) July 24, 2021
மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் எனிமி படத்தின் அதிரடியான டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.