செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், கட்சியில் நாமாக உருவாக்கப்படுகின்ற சட்ட விதிகள் அதை தேர்தல் ஆணையத்திற்கு நாம் கொடுக்கிறோம். அந்தத் தேர்தல் ஆணையம் அதன்படி நடப்பதற்கு நமக்கு ஆணையிடுகிறது. அதன்படி நாம் ஐந்து வருடத்திற்கு என்பது நம்முடைய கட்சியின் விதி. சில கட்சிகள் மூன்று வருட கட்சி என்பார்கள் , இரண்டு வருடம் வைத்திருப்பார்கள்.
ஆகவே விதி என்பது தொண்டர்களால் சேர்ந்து நாம் உருவாக்குகின்ற விதி, அது எதற்காக கட்சியின் வளர்ச்சிக்காகவும், தொண்டர்களின் நலனுக்காகவும், மக்களின் செல்வாக்கை பெறுவதற்காகவும் தான். அந்த விதியை அதே கட்சியின் தொண்டர்களின் நலனுக்காகவும், கட்சியினுடைய எதிர்கால நலனுக்காகவும், அம்மா அவர்களுடைய கனவு நூற்றாண்டுகள் இந்த இயக்கத்தை மக்கள் பணியாற்றுகின்ற….
இயக்கமாக தழைத்து நிற்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்…. அதற்காக நாம் முன்னிறுத்த வேண்டும். உலகத்தில் எந்த கட்சியுமே இது போன்ற கூட்டுத் தலைமை இல்லை. தலைவர் காலத்திலும் சரி, அம்மா காலத்திலும் சரி, அம்மா காலத்திற்கு பின்பும் சரி சூழ்நிலைக்கு ஏற்ப தொண்டர்களின் கருத்தின் அடிப்படையில், மக்களுடைய மனநிலையின் அடிப்படையிலேயே தான் இந்த ( அதிமுக + பாஜக ) கூட்டணி எல்லாம் அமையும்.
கூட்டணி வந்து நம்ம பேசுவதற்கு தலைமைக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது தவிர, நமக்கு வந்து வெளியேறங்கில் அதைப் பற்றி விவரிப்பதற்கு உரிமை கிடையாது. அதைப்பற்றி நாம் பேசவும் கூடாது. டெல்லி போயிட்டு வந்தீர்கள் இதில் என்ன சூட்சமம் இருக்கிறது என்று அண்ணன் கிட்ட கேளுங்க. அவர் விளக்கமாக பதில் சொல்லுவார். அவர் ஏன் தடுமாறினார் ? ஏன் தடம் தடம்புரள்கிறார் ? என்று அவர்களை தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.