அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அமைந்துள்ளது. இது அமெரிக்க அதிபரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அதிகாரப்பூர்வ பணியிடம் ஆகும். இந்த வெள்ளை மாளிகையின் கட்டுமான பணிகள் கடந்த 1792-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி தொடங்கப்பட்டு 1800-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி நிறைவடைந்தது. இந்த வெள்ளை மாளிகை உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படுகிறது.
இந்த கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தினால் கூட சில அறைகள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இந்த வெள்ளை மாளிகையில் பல்வேறு விதமான பாதுகாப்பு வசதிகள் இருப்பதால் ஹேக்கர்சால் கூட வெள்ளை மாளிகை ரகசியங்களை தெரிந்து கொள்ள முடியாது. இந்த மாளிகையின் மீது தாக்குதல் நடத்தினால் கூட உள்ளே இருப்பவர்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் வராது.