Categories
பல்சுவை

உலகத்தில் அதிக நாட்கள்…. உயிர் வாழ்ந்த பெண்மணி…. இதோ ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு….!!!

உலகில் அதிக வருடம் உயிர் வாழ்ந்த ஒரு பெண்மணியைப் பற்றி பார்க்கலாம். கடந்த 1875-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்த Jeanne Calment என்ற பெண் தான் உலகிலேயே அதிக நாட்கள் உயிர் வாழ்ந்துள்ளார். பொதுவாக நீண்ட நாட்கள் வாழ வேண்டுமென்றால் அதற்கு எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாமல், ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுபவர்களால் மட்டுமே வாழமுடியும் என நினைக்கின்றனர். ஆனால் Jeanne Calment ஒரு வாரத்திற்கு 1 கிலோவிற்கு மேல் இனிப்பு மற்றும் சாக்லெட் சாப்பிட்டுள்ளார். இவருக்கு தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

இவருக்கு தன்னுடைய 21-வது வயதில் இருந்து 112-வது வயது வரை சிகரெட் பழக்கமும் இருந்துள்ளது. மேலும் Jeanne Calment தன்னுடைய 85-வது வயதில் வால்சண்டை போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அதன்பிறகு தன்னுடைய 100-வது வயதில் ஒரு சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அதன்பிறகு 114-வது வயதில் ஒரு படத்திலும் நடித்துள்ளார். இதனையடுத்து 120-வது வயதில் பிரபல நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார். இவர் தன்னுடைய 122-வது வயதில் Jeanne Calment உயிரிழந்தார்.

Categories

Tech |