சீனா அமைதியாக காய் நகர்த்தி 3ஆம் உலக போருக்கு அச்சிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மன் நாட்டு உணவுத் துறையின் முன்னாள் தலைவரான Gerhard வர்த்தக ரீதியாக சீனாவை சார்ந்து இருப்பதை ஜெர்மனி கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மனித உரிமைகளை மீறி நடக்கும் சீனாவின் ஹவாய் 5ஜி சேவையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மேலும் அவர் கூறுகையில் சீனா அமைதியாக புத்திசாலித்தனத்துடன் தொடர்ந்து காய்களை நகர்த்தி வருவதாகவும், ஆனால் இதனை ஐரோப்பா கவனிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
உலக நாடுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர சீனா திட்டமிட்டிருப்பதாக நிபுணர்கள் பலர் எச்சரித்து இருக்கும் நிலையில் Gerhard இதனை தெரிவித்துள்ளார். இதனிடையே அந்த அறிக்கையை தயார் செய்தவர்களில் ஒருவரான எமிலி என்பவர் கூறுகையில் மூன்றாம் உலகப் போர் நடக்கும் என்றால் சீனா ஐரோப்பாவை தான் போர்க்களமாக பார்க்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மனியை போரின் அச்சாணியாக சீனா பார்ப்பதாகவும் ஜெர்மனியைச் சீனாவால் வெற்றி பெற முடிந்தால் அவர்களால் உலகத்தை கூட வெற்றி பெற முடியும் என அவர் எச்சரித்துள்ளார்.