Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

உலகத்துல எங்குமே நடக்காத ஒன்றையா இவர் செஞ்சிட்டாரு… கே.டி ராகவனுக்கு சீமான் சப்போர்ட்..!!

அவருக்கு தெரியாம அவருடைய படுக்கை அறையில, கழிவறைல கருவி வைத்து எடுத்துட்டு வருவது தான் சமூகக் குற்றம் என்று சீமான் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்..

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் பொதுச் செயலாளர் கே டி ராகவன் தொடர்பான ஆபாச உரையாடல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.. இதனை பார்த்த வலைதள வாசிகள் ராகவனா  இப்படி என்று பல்வேறு விதமாக கமெண்ட் செய்துவந்தனர்.. இந்த வீடியோவை பாஜக பிரமுகரும், யூடியூபருமான மதன் பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடன் வெளியிட்டதாக தெரிவித்தார்..

இதையடுத்து, என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்துவதற்காக  இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்ட படி சந்திப்பேன். தர்மம் வெல்லும் என்று கே.டி ராகவன் தெரிவித்தார்.. அதனைத்தொடர்ந்து மதன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவரது சேனலும் முடக்கப்பட்டது..

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இது சமூக குப்பை.. எது அநாகரிகம் என்று பாருங்கள்.. அவருடைய (ராகவன்) அனுமதி இல்ல.. அவருடைய ஒப்புதல் இல்ல.. அவருக்கு தெரியாம அவருடைய படுக்கை அறையில, கழிவறைல கருவி வைத்து எடுத்துட்டு வருவது தான் சமூகக் குற்றம்.. முதலில் அவரை (மதனை) கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்..

உலகத்தில் எங்குமே நடக்காத ஒன்றை இவர் செஞ்சிட்டாருன்னு நீங்க காட்டிகிட்டு இருக்கீங்க.. என்னது இது… சட்டசபையில் வைத்து ஆபாச படங்களை பார்த்தாங்க, அதை செய்யக்கூடாது பொறுப்புல இருக்குறவங்க.. தனிப்பட்ட முறையில், அவர் ஒரு அறையில் செய்ததை எடுத்து வைத்துக் கொண்டு அவர் அப்படி பண்ணிட்டாரு, அவர் அப்படி பண்ணிட்டாரு… கேடுகெட்ட சமூகமாக மாறிவிட்டதோ என்ற பயம் வருதுல இப்போ.

யார் யாரோட பேசுறது… யார் என்ன பேசுறாங்க.. இதை ஒட்டு கேட்கிறது.. பதிவு பண்றது, அதை பதிவு பண்ணிட்டு வெளியிடுறது.. இதனால என்ன சாதிக்க முடியும் நினைக்கிறாங்க.. இதனால என்ன வந்திர போது, எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் அரசு தனியார் மயமாக்கி கிட்டு இருக்காங்க அத யாரும்பேசல என்று காட்டமாக தெரிவித்துள்ளார்..

Categories

Tech |