Categories
அரசியல் மாநில செய்திகள்

உலகத்துல நடக்காத விஷயத்தையா…. இவரு பண்ணிட்டாரு…. கே.டி ராகவனுக்கு சீமான் ஆதரவு…!!!

தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் கே.டி ராகவன். இவர் பாஜகவில் உள்ள பெண்களிடம் தவறாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மதன் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கே.டி ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ  வெளியாகியது. இதனையடுத்து தன்னுடைய கே.டி ராகவன் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இது குறித்த சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில் மதன் மற்றும் அவரது நண்பரை பாஜக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அக்கட்சி நீக்கியது. கே.டி ராகவனின் இந்த வீடியோ வெளியானதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் உட்பட பலரும் தங்களுடைய கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் யாரும் செய்யாததையா கே.டி ராகவன் செய்துவிட்டார் என்று ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இது எல்லாம் ஒரு சமூகக் குற்றமா? யாரும் செய்யாததையா செய்து விட்டார். உலகத்தில் நடக்காததா இது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்றை அறைக்குள் கேமராவில் பதிவு செய்ததுதான் சமூகக் குற்றம். ஒருவரிடம் அனுமதி இல்லாமல் அவரை படம்பிடிப்பது குற்றம். அதை வெளியே விடுவதும் குற்றம் என்று சுட்டிக்காட்டிய அவர் அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டவரை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .

Categories

Tech |