உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15.27 கோடியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15.26 கோடியாக அதிகரித்துள்ளது. அதே சமயம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 13 கோடிக்கும் அதிகமானோர் நோய் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இதுவரை 32 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்று தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 1.88 கோடிக்கும் அதிகமானோர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை தற்போது மோசமாக உள்ளது. மேலும் கொரோனா அதிகமாக பரவி உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, பிரேசில், துருக்கி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.