கொரோனா தொற்று பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகளை பிச்சைக்காரர்களாகவும் மாறுகிறது என நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா பற்றி விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அது பின்வருமாறு, “கொரோனா பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகளை பிச்சைக்காரர்களாக மாற்றுகிறது. ஹிரோஷிமா நாகசாகியில் போட்ட மாதிரி யாராவது ஒரு பாம்போடு உலகத்தையே அழித்து விட்டால் நன்றாக இருக்கும். வாழ்க வளமுடன் …!!” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.