தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமலஹாசன். இவர் தற்போது நடித்து முடித்துள்ள விக்ரம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைய்லர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் அனிருத் இசையில் சில நாட்களுக்கு முன் வெளியான பத்தல பத்தல பாடல் சில சர்ச்சைகளை எழுப்பியது.
இந்நிலையில் இப்படத்தில் கமலுடன் இணைந்து நடித்துள்ள நடிகர் சந்தானபாரதி கமலை பற்றி பேசியுள்ளார். அதில் கமல் படம் சிறப்பாக வரவேண்டும் என்றால் எதையும் செய்வார் என்றும் பணத்தை பற்றி கவலைப்பட மாட்டார். என்று கூறினார். மேலும் படம் சிறப்பாக வரவேண்டும் என்பதை கமலின் ஒரே குறிக்கோள் என்று அவர் கூறினார்.