அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கலந்து கொண்டார். அதன் பிறகு மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சல்மானுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சல்மான் ருஷ்டி மீது தகவல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் 24 வயதான ஹடி மடர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கருத்து, வயிறு மற்றும் முகத்தில் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அதிக ரத்தத்தை இழந்த சல்மான் ருஷ்டி தற்போது செயற்கை சுவாச கருவியுடன் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார். பல மணிநேர சிகிச்சைக்கு பின் அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவருக்கு ஒரு கண் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு கண் பார்வை இழக்க நேரிட்டுள்ளது என்று அவர் புத்தகத்தின் ஏஜென்ட் தெரிவித்துள்ளார்.