Categories
மாநில செய்திகள்

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில்…. கருத்துகள், ஆலோசனைகள் தெரிவிக்கலாம்…. விசாரணைக் குழு ஆய்வு ….!!!!

சிதம்பரம் நடராஜர் கோவில் உலகப் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று . இக்கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு, கோவில் கனகசபையின்  மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்த அனுமதியினை அளித்தது. இதையடுத்து கனகசபையின்  மீது ஏறி ,பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் பணி பிரிவு ,கோவில் நிர்வாகம் , சிற்றம்பலம் மீது ஏறுவதற்கான அனுமதியினை மறுத்தது. ஆகவே  இது பற்றி ஆய்வு செய்யும் நோக்கில், இந்து சமய அறநிலைத்துறை, விசாரணைக் குழு ஒன்று அமைத்துள்ளது.

இதையடுத்து இந்த விசாரணை குழுவானது, நேரடியாக சென்று கோவிலில் ஆய்வு செய்யும் என்று கூறப்பட்டது. ஆனால் இதற்கிடையே, கடந்த 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் சிறப்பு அதிகாரி சுகுமாறன் என்பவரது தலைமையில், இணை, துணை ஆணையர்கள் மற்றும் தணிக்கை அதிகாரி கொண்ட குழுவினர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு மேற்கொள்ள வந்துள்ளனர். அப்போது, தீட்சிதர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுக்கு எந்த வித ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி  விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

இதையடுத்து இந்து சமய அறநிலைய துறை அறக்கட்டளைகள் சட்டத்தின் சட்ட பிரிவு 23 மற்றும் 33-ன் படி, ஆணையரால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம், கோவில் நலனில் அக்கறை உள்ள நபர்கள், இன்று முதல் ஜீன் 21-ஆம் தேதி மாலை 3-மணி வரையில்,  தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் போன்றவற்றை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. இதனை தொடர்ந்து அஞ்சல் மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம், மாலை 3 -மணிக்குள் தங்களின் கருத்துகளை அனுப்பலாம். இவ்வாறு  அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |