சினிமாவில் 28 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தளபதி விஜய்க்கு உலக அளவில் ரசிகர் கூட்டங்கள் ஏராளம். இவர் கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 4 அன்று வெளியான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு விமர்சனங்கள் பெறவில்லை. இதையடுத்து விஜய் நடித்த பல திரைப்படங்கள் தோல்விகளைச் சந்தித்தது.பின் ‘பூவே உனக்காக’ திரைப்படத்தின் மூலம் முதல் வெற்றியை கண்டார். பின்னர் தனது கடின உழைப்பால் அடுத்தடுத்த திரைப்படங்களில் அசத்தலாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . இவர் நடிப்பில் வெளியான கில்லி, திருப்பாச்சி, போக்கிரி, சிவகாசி, திருமலை, மதுர ஆகிய பல திரைப்படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானது மட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது.
மேலும் இவர் நடிப்பில் வெளியான துப்பாக்கி, கத்தி,ஜில்லா ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து இவர் இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய திரைப்படங்கள் கோடிக்கணக்கில் வசூல் சாதனை செய்தது. தற்போது 64 திரைப்படங்களில் நடித்துள்ள தளபதி விஜய் சினிமாவில் 28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். திரையுலக பிரபலங்களும் விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் . மேலும் சமூக வலைத்தளங்களில் 28YearsOfBelovedVIJAY என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.