Categories
மாநில செய்திகள்

உலகமே ஆச்சரியமா பார்க்கும்!…. சாதனை நிகழ்த்தும் இந்தியா!…. ராகேஷ் சர்மா அதிரடி பேச்சு….!!!!

நீலகிரியில் வருடந்தோறும் தேசிய மாணவர் படை சார்பாக அகில இந்திய அளவிலான தேசிய மாணவர்படை மாணவிகள் மலையேற்ற பயிற்சிகளில் பங்கேற்கின்றனர். சென்ற 2 வருடங்களாக கொரோனா காரணமாக மலையேற்ற பயிற்சி நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த வருடத்துக்கான மலையேற்ற பயிற்சி முகாம் குன்னூர் வெலிங்டன் ஹவாய் ஹில் பகுதியில் நடந்து வருகிறது. இம்முகாமில் விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியரான ராகேஷ்சர்மா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதையடுத்து அவர் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது “கடந்த 75 வருடங்களுக்கு மேல் ராணுவம் சிறப்பாகவும், பொறுப்புடனும் இயங்கி வருகிறது.

ராணுவ பணியில் இருந்தாலும், பணிமுடித்து வெளியே வந்தாலும் அதற்கு மரியாதை என்றுமே இருக்கிறது. சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களையே சாதித்தவர்களாக மீடியா காண்பிக்கிறது. அதனை பார்த்து ஏழை, நடுத்தரமாக இருப்பவர்கள் சாதிக்க முடியாது என்று நினைக்ககக்கூடாது. தங்களாலும் முடியும் எனும் முயற்சி மிக அவசியம்” என்று அவர் கூறினார். அதனைத்தொடர்ந்து ராகேஷ்சர்மா பேட்டி அளித்தபோது “மேற்கத்திய நாடுகளிலிருந்து எதிர்பார்த்தவாறு தொழில் நுட்பமானது கிடைக்காமல் இருந்த நிலையில், இப்போதைய நவீன தொழில்நுட்பம் விரிவாக்கத்தில் இந்தியா இருக்கிறது. உலகமே வியந்து பார்க்கும் விதமாக மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தி வருகிறது. வரும் காலத்தில் தனியார் பங்களிப்பு உள்ள பட்சத்தில் விண்வெளி சாதனைக்கு மேலும் உதவிகரமாக இருக்கும்” என அவர்  தெரிவித்தார்

Categories

Tech |