இந்தியாவின் தடுப்பூசி காக உலகமே காத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் தடுப்பூசிக்காக உலகமே காத்திருக்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா செயல்படுத்தி கொண்டிருப்பதையும், உலகம் அதனை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.