இந்த உலகத்தில் மரணத்தையே நேரில் பார்த்து வந்தவர் என்று நாம் அண்டர்டேக்கரை கூறுவோம். ஆனால் அது உண்மையா இல்லையா என்பது தற்போது வரை தெரியாது. ஆனால் உண்மையாகவே மரணத்தை நேரில் பார்த்து வந்த பெண் வாழ்க்கையில் சாதித்துள்ளார். அந்த பெண்ணின் வாழ்க்கையை பற்றி தான் நாம் தற்போது பார்க்கப் போகிறோம். எலிசபெத் ராபின்சன் என்ற பெண் சிறுவயது முதலே மிகவும் வேகமாக ஓட கூடியவர். இவர் சிறு வயது முதலே ஓட்டப்பந்தயத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தவர். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தாலும் தனது வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற வெறி அவரிடம் இருந்தது. எப்பொழுதும் போல் ஒரு போட்டியில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் சென்றபோது அந்த விமானம் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தில் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த எலிசபெத் ராபின்சன் இறந்துவிட்டார் என்று எண்ணி புதைக்க சென்ற போதுதான் அவர் உயிருடன் உள்ளார் என்ற விஷயம் தெரியவந்தது. இதையடுத்து அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு கை கால் உடைந்து உள்ளதாகவும், அவர் கோமாவிற்கு சென்று விட்டதாகவும் கூறினார். மேலும் ஏழு மாதம் கழித்து அவருக்கு சுய நினைவு திரும்பியது. அப்போது உன்னால் இனி எழுந்து நடக்க கூட முடியாது என்று தெரிவித்தார்கள்.
ஆனால் அதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் முயற்சியை விடாமல் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் கடின முயற்சி மேற்கொண்டார். எந்த பெண்ணைப் பார்த்து நடக்கவே முடியாது என்று கூறினார்களோ? அந்தப் பெண் அடுத்த 5 வருடத்தில் உலகத்தில் முதல் முறையாக ஒலிம்பிக்கில் கோல்ட் மெடல் பெற்ற பெண்ணாக வலம் வந்தார். உன்னால் வாழ்க்கையில் எதுவுமே செய்ய முடியாது என்று ஒருவரை உதாசீனப் படுத்துவது என்பது மிகவும் தவறான விஷயம். அவராலும் ஒரு நாள் நிச்சயம் வாழ்க்கையில் வெல்ல முடியும் என்பது தான் இந்த பெண்ணின் கதையிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம்.