இனி வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் என முன்னாள் முதல்-மந்திரி கூறியுள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சரியான தலைமை இல்லாமல் இருக்கிறது. இதனால் காங்கிரஸ் அரசு மூழ்கும் படகு போல் மாறி வருகிறது. கர்நாடகாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி சிறிது நிலைத்து நிற்கிறது. ஆனால் இனி வரும் நாள்களில் காங்கிரஸ் கட்சி நிலைத்து நிற்க வாய்ப்பு இல்லை. இதனையடுத்து கர்நாடக சட்டசபைத் தேர்தலில் 150 இடங்களில் பாஜக அமோக வெற்றி பெறும். நாங்கள் வெற்றி பெறுவதற்கான பணியை இப்போதே தொடங்கி விட்டோம். அதன்பிறகு உலகமே வாழ்த்தும் வகையில் பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்.
இந்திய பிரதமர் மோடி விவசாயம் பாதுகாப்பு, நிதி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இனிவரும் நாட்களில் மத்திய அரசுகளின் திட்டத்தை மக்களிடம் சிறப்பான முறையில் எடுத்துச் செல்வோம். இந்த திட்டங்களின் மூலமாக பாரதிய ஜனதா கட்சியை பலப்படுத்துவோம். பிரதமர் மோடியின் க்ருஷ் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒரு வருடத்திற்கு தலா ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் இனி வருங்காலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இந்த பணத்தை இரண்டு மடங்காக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறினார்.