Categories
உலக செய்திகள்

“உலகமே வியக்கும்” மிகப்பெரிய இயற்கை துறைமுகம்…. எங்கு உள்ளது தெரியுமா…??

உலகில் சரக்கு போக்குவரத்து அதிக அளவில் கப்பல் மூலமே நடைபெறுவதற்கு துறைமுகம் ஆனது முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் இறக்குமதி செய்வதற்கும் கடல் வழி போக்குவரத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி துறைமுகம் உலகில் இயற்கையான பெரிய துறைமுகம் என்று அழைக்கப்படுகிறது.

இது தான் உலகிற்கு அறிமுகமான சிட்னியின் முகம். இதன் குறுக்கே உள்ள சிட்னி துறைமுக பாலம் பிரசித்தமானது. இந்தப் பாலமும் அருகில் இருக்கும் சிட்னி ஓப்பரா ஆகியன உலகம் முழுவது அறிந்துள்ள சிட்னியின் அடையாளங்கள். இந்த இயற்கைத் துறைமுகம் உண்மையில் ஒரு கடலில் மூழ்கிய பள்ளத்தாக்கு. ஆகவே சுற்றிலும் பல வளைவுகள், நெளிவுகள் துறைமுகக் கடற்கரையை சுவாரசியமாக ஆக்குகிறது. இதனுடைய பரப்பளவு 54 சதுர கிலோ மீட்டர், நீளம் 17.7 கி.மீ, இதன் ஆழம் 148 அடி. இத்துறைமுகம் 8 தீவுகளை உள்ளடக்கியது. இங்கு 580 மீன் இனங்கள் வாழ்கின்றன.

Categories

Tech |